டீகோ கார்ஷியா தீவில் சிறைபிடிக்கப்பட்ட 12 கன்னியாகுமரி மீனவர்கள்....!
நாகர்கோவில்: மத்திய இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள டீகோ கார்ஷியாவுக்கு மீன் பிடிக்கப் போய் அங்கு கைதாகியுள்ளனர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள். அவர்களை மீட்க நடவடிக்கைகக் கோரி தமிழக அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிட்டத்தட்ட ப வடிவிலான ஒரு தீவுக் கூட்டம்தான் இந்த டீகோகார்ஷியா. மத்திய இந்தியப் பெருங்கடலில் உள்ள மிகப் பெரிய தீவுக் கூட்டம் இது. இங்கு முறையான அரசு நிர்வாகம் இல்லை. மாறாக லண்டனில் இருந்தபடி இங்கிலாந்து அரசு இதனை நிர்வகித்து வருகிறது. இங்கு அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாட்டவர் மட்டுமே ஓரளவு உள்ளனர். இங்கு நிரந்தரமாக தங்கியிருக்கும் குடிமக்கள் கிடையாது. மாறாக இரு நாட்டுப் படையினர்தான் இங்கு நிலை கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், குமரி மேற்கு மாவட்டம் தூத்தூர் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் நசியான். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த சிபு, லெனின், முள்ளூர் துறையைச் சேர்ந்த கிறிஸ்துராஜா, சுதன், அருளீசன், ரெஜீஸ், எபால்டு, பின்டோ, மேல்மிடாலத்தைச் சேர்ந்த மரியதாசன், கைலாஸ், தக்கலையைச் சேர்ந்த பிரசாத், நிஷாத் ஆகிய 12 பேர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கடந்த 10ம் தேதி கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இவர்கள் டீகோ கார்ஷீயா தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது தீவின் கடற்படை அதிகாரிகள் குமரி மீனவர்களின் விசைப்படகை சுற்றிவளைத்து பிடித்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை அதிகாரிகள் சிறை பிடித்து அங்குள்ள துறைமுகத்தில் வைத்தனர்.
இந்த தகவல் 2 நாட்களுக்கு முன்பு தான் தூத்தூரில் உள்ள மீனவர்களின் உறவினர்களுக்கு தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனிக்கு தகவல் கொடுத்தனர். அவர் இது தொடர்பாக மத்திய, மாநில அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை மனு அனுப்பினார்.
தமிழக முதல்வருக்கும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இந்த தகவலை தெரிவித்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications