எத்தனை முறை அசிங்கப்பட்டாலும் புத்தி வராதாய்யா உங்களுக்கெல்லாம்?
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

ஈரோடு: நாளுக்கு நாள் இந்த காமவெறியர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் போய்விட்டது. எவ்வளவுதான் பாலியல் சம்பவங்கள் குறித்த செய்திகளையும், பலாத்காரத்தில் ஈடுபட்டவரை கைது செய்து தண்டனை அளிக்கப்பட்ட செய்திகளையும் மீடியாக்கள் சளைக்காமல் நாள்தோறும் ஒளிபரப்பி வந்தாலும் இந்த ஆசாமிகளின் 'சதைவெறியாட்டம்' குறைந்தபாடில்லை. பல வழிகளில் நாசூக்காக தங்கள் காம லீலைகளை அரங்கேற்றினாலும் கடைசியில் அசிங்கப்பட்டும் கேவலப்பட்டும் கூட சபலபுத்தி ஆசாமிகளுக்கு புத்தி வரவில்லை.
அயனாவரம், புதுச்சேரி சம்பவம் அடங்குவதற்குள் ஈரோட்டில் ஒரு சம்பவம். கொடுமுடி அருகே ஊஞ்சலூர் என்ற பகுதி உள்ளது. இங்கு சரவணன் என்பவர் விவசாய கூலி தொழிலாளியாக உள்ளார். இவருக்கு வயது 42. நேற்றிரவு காசிபாளையம் பகுதியில் 13 வயது சிறுமி பள்ளியிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தாள். அப்போது சிறுமியிடம் பேச்சுகொடுத்த சரவணன், அப்படியே காலிங்கராயன் வாய்க்கால் பகுதிக்கு அழைத்து வந்துவிட்டார். அங்கு சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட தொடங்கினார்.

இதனை அவ்வழியாக கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, சரவணனை கையும் களவுமாக பிடித்துவிசாரித்தனர்.அப்போது பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதற்காக சிறுமியை ஏமாற்றி அழைத்து வந்ததாக கூறினார். அதுமட்டுமல்லாமல், ஊஞ்சலூர் பகுதியில் 16 வயது, 12 வயது, 11 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை இதேபோல பாலியல் செய்துள்ளதும், அப்போதும் பொதுமக்களிடம் கையும் களவுமாக மாட்டியதுடன் அவர்களிடம் தர்ம அடி வாங்கி, ஊரை விட்டு ஓடிவந்தவர் என்பதும் தெரியவந்தது.
இப்படி 3 சிறுமிகள் இல்லாமல் 4-வதாக மற்றொரு சிறுமியிடம் வெறித்தனத்தை காட்ட முயன்ற இந்த சபலபுத்தி சரவணனை பொதுமக்கள் கொடுமுடி போலீசில் ஒப்படைத்தனர். அப்போது, "இந்த காமகொடூரன் ஏற்கனவே 3 பெண்களிடம் இதுபோல அத்துமீறி உள்ளதால், உரிய தண்டனை பெற்று தரவேண்டும் என்றும், இவனை வெளியே விட்டுவிடவேண்டாம், இவன் ஜெயிலிலிலேயே இருக்க வேண்டும்" என்றும் மன்றாடி கேட்டுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications