உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.5 லட்சம் தங்கம் பறிமுதல்.. திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
உள்ளாடையில் கடத்தி வந்த ரூ.4.63 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் தனது உள்ளாடையில் ரூ.4.63 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்துள்ளார்.
சுங்கத்துறை அதிகாரிகள் எவ்வளவுதான் கெடுபிடி சோதனைகள் நடத்தி பலவேரை கைது செய்து உள்ளே தள்ளினாலும், விமான நிலையங்களில் கடத்தல் என்பது இன்னும் குறைந்தபாடில்லை. எங்கிருந்துதான் கடத்தல்காரர்களுக்கு இவ்வளவு துணிச்சல் வருகிறதோ தெரியவில்லை. எனினும் அதிகாரிகள் தங்கள் சோதனை, விசாரணைகளை தீவிரப்படுத்தியே வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்றிரவு துபாயிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் வந்து இறங்கியது. அதிலிருந்து வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை அதிகாரிகள் வழக்கமான அடிப்படையில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, குறிப்பிட்டஒரு இளைஞர் மீது சந்தேகம் ஏற்படவும் அவரை தனி அறைக்கு அழைத்து நவீன ஸ்கேன் கருவி மூலம் சோதனை செய்தனர்.
அப்போது அந்த இளைஞர் தனது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அது ரூ.4.63 லட்சம் மதிப்புள்ள 149 கிராம் தங்கம் என கூறப்படுகிறது. அவற்றினை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இளைஞரின் பெயர் ரகுமான் என்பதும், அவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. எனினும் இந்த தங்கம் கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? எங்கிருந்து யாருக்காக தங்கத்தை கடத்தி செல்லப்படுகிறது என்பன குறித்து தொடர் விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications