கள்ளக்குறிச்சி பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய மேலும் 5 பேர் கைது... 15 நாட்கள் சிறையிலடைப்பு!
கள்ளக்குறிச்சி : கனியாமூர் கலவரத்தில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய ஐந்து பேர், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் பள்ளி மாணவி ஸ்ரீ மதி மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது பள்ளி வளாகத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்களைப் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி தீ வைத்துக் கொளுத்தினர். இதனிடையே கலவரம் தொடர்பான வழக்கு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு குற்றவாளிகளை தொடர்ந்து அதிரடியாக கைது செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை தொடர்பாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி கட்டிடத்தை சேதப்படுத்தியதாக ஒரே நாளில் 8 பேரை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த அருண்குமார், கமல்ராஜ், ஸ்ரீதர், சின்னசேலம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, கடலூர் மாவட்டம் அன்னாவள்ளி பகுதியை சேர்ந்த பாலமூர்த்தி, சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் கார்த்தி, கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணீஷ் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மொத்தமாக, 8 பேரை ஒரே நாளில் சிறப்பு புலனாய்வு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர், அனைவரும் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி முன்பு ஆஜர்படுத்தினார். தொடர்ந்து குற்றவாளிகளை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.
இதுவரை இந்த கலவரம் தொடர்பாக வீடியோ ஆதாரங்களை கொண்டு சிறப்பு புலனாய்வு குழு போலீசார் மொத்தமாக 10 நபர்களை கைது செய்துள்ளனர். தொடர்ந்து வீடியோ ஆதாரங்களை கொண்டு பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications