ஆண்டவன் எப்பவுமே கணக்கை சரியாத்தான் போடுவான்.. ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் முழக்கம்!

Subscribe to Oneindia Tamil

ரிஷிவந்தியம்: ஆண்டவன் எப்போதுமே கணக்கை சரியாகத்தான் போடுவான். ஜெயலலிதா விஷயத்திலும் அதுதான் நடந்துள்ளது. அவருக்கு இப்போதைக்கு ஜாமீனே கிடைக்காது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தனது தொகுதியான ரிஷிவந்தியத்திற்கு நேற்று போயிருந்தார் விஜயகாந்த். அப்போது அங்கு தனது கட்சியினரிடையே உற்சாகமாகப் பேசினார். நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார்.

விஜயகாந்த்தின் பேச்சிலிருந்து....

பிழைக்க.. உழைக்க

பிழைக்க.. உழைக்க

நான் அரசியலுக்கு பிழைக்க வரவில்லை; உழைக்க வந்துள்ளேன்.

அரசன் .. தெய்வம்

அரசன் .. தெய்வம்

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று கூறுவர். ஆண்டவன், கணக்கைச் சரியாகத்தான் போடுவான்.

மாபெரும் சபை.. மாலைகள்

மாபெரும் சபை.. மாலைகள்

'மாபெரும் சபையினில் நீ நடந்தால், மாலைகள் விழ வேண்டும் என்று எம்.ஜி.ஆர்., பாடினார். அவர் மட்டுமே தொடர்ச்சியாக, 13 ஆண்டுகள் தமிழகத்தில் முதல்வராக இருந்தார்.

சொத்துக்குவிப்பு.. வாய்தா மேல் வாய்தா

சொத்துக்குவிப்பு.. வாய்தா மேல் வாய்தா

ஜெயலலிதா, தவறு செய்ததால் தான் சொத்துக் குவிப்பு வழக்கில், வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கினார். இன்று ஜாமீனுக்காக அலைகிறார் ஜெயலலிதா.

சூது கவ்வும்.. மீண்டும் வெல்லும்

சூது கவ்வும்.. மீண்டும் வெல்லும்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்று கூறுவர். பிறகு ஏன் ஜாமீன் கேட்க வேண்டும். சும்மா இருந்தாலே வெளியே வந்துவிடலாம் அல்லவா.

இறங்குமுகம்.. ஏறுமுகம்

இறங்குமுகம்.. ஏறுமுகம்

எங்களுக்கு இறங்கு முகம் என்று சட்டசபையில் ஜெ., சொன்னார். இன்று யாருக்கு ஏறுமுகம், யாருக்கு இறங்கு முகம் என்பதை தமிழகமே பார்க்கிறது.

சவுதாலா.. லாலு பிரசாத்

சவுதாலா.. லாலு பிரசாத்

ஜெயலலிதாவுக்கு, இப்போதைக்கு ஜாமீன் கிடைக்காது. ஓம் பிரகாஷ் சவுதாலாவை ஜெயிலில் அடைத்துள்ளனர். லாலு பிரசாத் யாதவிற்கு 10 மாதம் கழித்துதான், ஜாமீன் கிடைத்தது. அவர்களுக்கு என்ன நடைமுறையோ அதேதான் ஜெயலலிதாவுக்கும் என்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+