என்ன சமுதாயம் இது… இரண்டரை வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 16 வயது சிறுவன்!!

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தில், இரண்டரை வயதே ஆன சிறுமியை, 16 வயதான சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெல்லுவாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது வீட்டிற்கு கடலூர் மாவட்டம் மணவாளநல்லூரை சேர்ந்த உறவினர் கணேசன் என்பவரின் மகன் விமல் வந்துள்ளான்.

படிப்பு ஏறாத்தால் பாதியிலேயே பள்ளிப் படிப்பை விட்டு விட்டு ஹோட்டலில் கிளீனர் வேலை பார்த்து வருகிறான். உறவினர் வீட்டுக்கு வந்த இடத்தில் தான் வைத்திருந்த செல்போனில் டவுன்லோடு செய்து வைத்திருந்த ஆபாசப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவனுக்குப் பக்கத்தில் செல்லத்துரையின் இரண்டரை வயது மகள் விளையாடிக் கொண்டிருந்தாள். ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்த விமல், சிறுமியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.

இதையடுத்து சிறுமி அலறியுள்ளாள். அவளது குரல் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். விமலின் அக்கிரமச் செயலைப் பார்த்து அதிர்ந்து போன அவர்கள் அவனை சரமாரியாக அடித்துப் பிடிக்க முயன்றனர். ஆனால் விமல் தப்பி ஓடி விட்டான்.

உடனடியாக போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் தப்பி ஓடிய விமலை பஸ் நிலையத்தில் வைத்துப் பிடித்தனர். அவனைக் கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவனை சிறார் காப்பகத்தில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+