திருவண்ணாமலை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 17 மாணவர்கள் காயம்
Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரத்தை அடுத்த மைக்கேல்புரத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு சுற்றுப்பகுதிகளிலிருந்து மாணவர்களை ஏற்றி வந்த வேன் இளயாக்குண்ணி என்ற கிராமம் அருகே இன்று காலை விபத்துக்குள்ளானது. சாலையோரம் இருந்த கல் மீது வேனின் சக்கரங்கள் ஏறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களில் படுகாயமடைந்த 5 மாணவர்களுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயமடைந்த மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications