ஓபிஎஸ் உள்பட 16 அமைச்சர்களுக்கு "கங்கிராட்ஸ்".. மீண்டும் சீட் கிடைச்சிருச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட தற்போது அமைச்சர்களாக பதவி வகித்து வரும் 16 பேருக்கு மீண்டும் அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

அதில், தற்போதைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில், ஜெயலலிதா நீங்கலான 26 அமைச்சர்களில் 16 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ்...

ஓபிஎஸ்...

அதன்படி, நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலிலும் ஓபிஎஸ் இதே தொகுதியில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பா.வளர்மதி...

பா.வளர்மதி...

இதேபோல், ஆயிரம்விளக்குத் தொகுதியில் சமூக நலம், சத்துணவுத் திட்டம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர். பா. வளர்மதி போட்டியிடுகிறார். இவருக்கும் பழைய தொகுதியே கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பத்...

சம்பத்...

கடலூர் மாவட்டச் செயலரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத்திற்கு கடலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தமுறையும் இதே தொகுதியில் போட்டியிட்டே அவர் வெற்றி பெற்றார்.

நத்தம் விஸ்வநாதன்...

நத்தம் விஸ்வநாதன்...

இதேபோல், ஒரத்தநாடு தொகுதியில் அமைச்சர் ஆர் வைத்திலிங்கமும், விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரும் போட்டியிடுகிறார்கள். ஆத்தூர் தொகுதியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன் போட்டியிடுகிறார்.

வேலுமணி...

வேலுமணி...

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும், தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி. தங்கமணி குமாரபாளையம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

கோகுல இந்திரா...

கோகுல இந்திரா...

இவர்கள் தவிர பொள்ளாச்சியில் ஜெயராமன், நன்னிலம் தொகுதியில் ஆர். காமராஜ், எழும்பூரில் பரிதி இளம்வழுதியும், பொன்னேரியில் பலராமன், கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி...

ராஜேந்திர பாலாஜி...

இதேபோல், எடப்பாடி தொகுதியில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், மதுரை மேற்கில் செல்லூர் மு. ராஜுவும், சிவகாசி தொகுதியில் ராஜேந்திர பாலாஜியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோப்பு வெங்கடாச்சலம்...

தோப்பு வெங்கடாச்சலம்...

பெருந்துறை தொகுதியில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலமும், திருமங்கலத்தில் ஆர்.பி.உதயகுமாரும், ஜோலார்பேட்டையில் கே.சி. வீரமணியும் களமிறங்குகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+