கர்ப்பமாக்கிய மாமன் மகனுடன் 17 வயது சிறுமிக்கு திருமணம்! தடுத்து நிறுத்திய குழந்தைகள் நல கமிட்டி
புதுச்சேரி: கர்ப்பமாக்கிய மாமன் மகனுடன், 17 வயது பெண்ணுக்கு திருமணம் நடைபெறவிருந்தபோது, தடாலடியாக உள்ளே புகுந்து திருமணத்தை தடுத்து, அப்பெண்ணை காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது, குழந்தைகள் நல கமிட்டி. இப்படி ஒரு சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.
புதுச்சேரி, மங்களம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அவளது மாமன் மகன் ரமேஷுக்கும் (21) இடையே, கோயில் ஒன்றில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கர்ப்பத்தில் போய் முடிந்ததை அறிந்து கொண்ட இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நான்கு மாத கர்ப்பிணியான 17 வயது சிறுமியும், திருமண கோலத்தில் மணவரை நோக்கி கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குழந்தைகள் நல கமிட்டியினர், சிறுமிக்கு 18 வயதாகவில்லை என்பதை காரணம் காண்பித்து, திருமணத்தை நிறுத்தினர். சிறுமியை காப்பகம் அனுப்பினர்.
போலீஸ் நடவடிக்கைக்கு பயந்த திருமண வீட்டார் தலைமறைவாகிவிட்டனர். ரமேஷ் மீது மங்களம் காவல் நிலையத்தில், போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் நல கமிட்டி தலைவி வித்யா ராம்குமாருக்கு கடந்த 11ம் தேதி, இத்திருமணம் குறித்து யாரோ போன் போட்டு தகவல் தெரிவித்துள்ளனர். எனவேதான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"பலாத்காரம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு தண்டனை கிடைப்பதுதான் நியாயம். அவருக்கே திருமணம் செய்து வைத்தால் பிறருக்கு ஊக்கம் கிடைத்துவிடும்" என்று கமிட்டி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications