நடிகர் பிரசாந்தின் மாஜி மனைவி கிரகலட்சுமி வீட்டில் 170 சவரன் நகை கொள்ளை
Recommended Video

சென்னை: நடிகர் பிரசாந்த் முன்னாள் மனைவி கிரகலட்சுமி வீட்டில் 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை மாம்பலத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
சென்னை மாம்பலம் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இவரது மனைவி சிவகாமி சுந்தரி. இவர்களுக்கு பொன்குமார், நாகராஜ் ஆகிய மகன்களும், கிரகலட்சுமி என்ற மகளும் உள்ளனர். கிரகலட்சுமி நடிகர் பிரசாத்தின் மாஜி மனைவியாவார்.

கிரகலட்சுமிக்கும் நடிகர் பிரசாந்த்க்கும் 1.9.2005 ஆம் தேதி இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. 31.7.2006 ஆம் தேதி அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.
முதல் திருமணத்தை மறைத்து தன்னை கிரகலட்சுமி இரண்டாவதாக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குடும்பநல நீதிமன்றம் திருமணத்தை செல்லாது என அறிவித்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து கிரகலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். பிரசாந்தின் வழக்கில் கிரகலட்சுமியிடம் இருந்து விவாகரத்து வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது .
இந்த பிரச்சினை ஒருபுறம் இருக்க கிரகலட்சுமியின் அண்ணன் பொன்குமாரின் மனைவி அபிராமி கடந்த 2010ஆம் ஆண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பொன்குமார், நாகராஜ், சிவகாமிசுந்தரி, கிரகலட்சுமி உட்பட 7 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கிரகலட்சுமியின் வீட்டில் இன்று 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை மாம்பலத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து மாம்பலம் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விவாகரத்து, கொலை வழக்கு என நீதிமன்ற படியேறிய கிரகலட்சுமி, இப்போது நகை திருடு போன வழக்கிற்காக காவல்நிலைய படியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications