For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகள் காலி.. தினகரன் புது எம்எல்ஏ.. அரசு வெப்சைட்டில் அப்டேட்

தமிழகத்தில் 18 சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளதாக அரசு வெப்சைட்டில் தகவல் வெளியாகியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகள் இவைதான்!- வீடியோ

    சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளும் காலியாக உள்ளதாகவும், தினகரன் சுயேச்சை எம்எல்ஏ எனவும் அரசு வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சட்டசபை தலைவர் தனபாலிடம் புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனிடையே, கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாக திடீரென தெரிவித்து அணி மாறினார்.

    இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் அரசிதழிலும் வெளியிடப்பட்டு அவர்கள் வகித்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனவரி 9ல் இறுதி விசாரணை

    ஜனவரி 9ல் இறுதி விசாரணை

    இதை எதிர்த்து ஹைகோர்ட்டில் 18 பேர் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையில் 18 எம்.எல்.ஏ.க்களின் தரப்பிலும் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. வழக்கின் இறுதி விசாரணை வருகிற 9ஆம்தேதி உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

    நீதிபதிகள் விசாரணை

    நீதிபதிகள் விசாரணை

    அன்றைய தினம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலும், சபாநாயகர் தரப்பிலும் இறுதி வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் வழக்கை விசாரித்து முடிக்க உள்ளனர். இதன் பிறகு தீர்ப்புக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காலியானதாக அறிவிப்பு

    காலியானதாக அறிவிப்பு

    வழக்கில் மறு உத்தரவு வரும்வரை, 18 பேரின் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் ஏற்பாடு நடத்த கூடாது என்றும், அவர்களின் தொகுதிகள் காலியாகிவிட்டதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க கூடாது என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில் 18 பேரின் தொகுதிகளும் காலியானதாக அரசு வெப்சைட்டில் போடப்பட்ட தகவல் மாற்றப்படவேயில்லை. அதேநேரம் தினகரன் சுயேச்சை எம்எல்ஏவாக பதவியேற்றுள்ளதாக வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காலியான தொகுதிகள் எவை எவை

    காலியான தொகுதிகள் எவை எவை

    பூந்தமல்லி தொகுதி டி.ஏ.ஏழுமலை பெரம்பூர் தொகுதி பி.வெற்றிவேல் திருப்போரூர் மு.கோதண்டபாணி, சோளிங்கர் என்.ஜி.பார்த்திபன், குடியாத்தம் தொகுதி சி.ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் தொகுதி ஆர்.பாலசுப்பிரமணி, பாப்பிரெட்டி பட்டி பெ.பழனியப்பன், அரூர் ஆர்.முருகன், நிலக்கோட்டை ஆர்.தங்கதுரை, அரவக்குறிச்சி வி.செந்தில்பாலாஜி, தஞ்சாவூர் எம்.ரெங்கசாமி,மானாமதுரை சோ.மாரியப்பன் கென்னடி, ஆண்டிபட்டி தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் கா.கதிர்காமு, சாத்தூர் எஸ்.ஜி.சுப்பிரமணியன், பரமக்குடி எஸ்.முத்தையா, விளாத்திக்குளம் கு.உமா மகேஸ்வரி, ஒட்டப்பிடாரம் ஆர்.சுந்தர்ராஜ் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தொகுதிகள் காலியானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    TN Assembly secretariat has declared 18 Assembly seats are vacant after the MLAs who are supporting Dinakaran were disqualified.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X