18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கப்பட்ட வழக்கு விசாரணை.. ஜன.9ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கப்பட்ட வழக்கின் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கப்பட்ட வழக்கின் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதுனுடன் நிலுவையில் உள்ள தமிழக சட்டப்பேரவை தொடர்பான மீதமுள்ள 7 வழக்குகளின் விசாரணையும் ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இதையடுத்து இந்த தகுதி நீக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடக்கப்பட்டது. இதனுடன் இன்னும் 7 கூடுதல் வழக்குகளும் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பு வாதம் கடந்த நவம்பர் 27ம் தேதி நடந்தது. இதனையடுத்து எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட 8 வழக்குகள் டிசம்பர் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை வரை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.
இந்த நிலையில் இன்றைய விசாரணையின் முடிவில் இந்த வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கப்பட்டது உள்ளிட்ட 8 வழக்குகளின் மீதான விசாரணை ஜன.9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications