நெல்லை காவலர் கொலை சம்பவம்: 2 பேர் கைது.. முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு
காவலர் கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video

நெல்லை: நடைபெற்ற மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற காவலர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீசார் வலைவீசியுள்ளனர்.
வள்ளியூர் அருகே விஜயநாராயணம் சிற்றாற்று பகுதியில் இரவு நேரத்தில் மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மணல் கொள்ளை குறித்து விசாரிக்க சிறப்பு பிரிவு காவலர் ஜெகதீசன் அங்கு நேற்று முன்தினம் இரவு சென்றார்.

ஆனால் பணிக்கு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை என்று சக காவலர்கள் அவரை தேடி ஆற்றுப்பகுதிக்கு வந்து பார்த்தனர். அப்போது மணல் கொள்ளையர்கள் சிலர் இரும்பு கம்பிகளை கொண்டு ஜெகதீசனை அடித்துக் கொலை செய்யப்பட்டு தப்பியோடிவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ஜெகதீசனின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்து படுகொலை குறித்த விசாரணையை கையிலெடுத்தனர். அதன்படி கைப்பற்றப்பட்ட டிராக்டர் தாமரைகுளம் கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதையடுத்து மணல் அள்ளிச்சென்ற கிருஷ்ணன் 50, முருகபெருமாள் 21 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான முருகன் உள்ளிட்ட சிலர் தேடப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேரிடம் விசாணை நடத்தப்பட்டு, கொலையாளிகள் அனைவரையும் விரைவில்கைது செய்வோம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!











Click it and Unblock the Notifications