சிவகாசி பட்டாசு கடை விபத்து: 2 பேர் கைது- அதிகாரிகள் இனியாவது விழித்துக்கொள்வார்களா?
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி புறவழிச்சாலையில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 9 பேர் பலியாகினர். இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 9 உயிர்கள் பலியான பின்னராவது அதிகாரிகள் பட்டாசு விற்பனை நிலையங்களை கண்காணிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் பட்டாசு உற்பத்தி நகரமான சிவகாசியில் இருந்து பல பகுதிகளுக்கு பட்டாசு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல தீபாவளி விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருந்த பட்டாசுகள் சிவகாசி காமாக் சாலையில் உள்ள ஆனந்த்ராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கிற்கு 2 வேன்களில் கொண்டு வரப்பட்டுள்ளன.
வெயில் கொளுத்தியதால் கிடங்கிற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த அந்த வேன்களிலிருந்த தீப்பெட்டி மத்தாப்புகளில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றியது. பேன்சி ரக வெடிகளும் வேனில் இருந்ததால் கடும் சத்தத்துடன் வெடிகள் வெடிக்கத் தொடங்கின. இந்த தீ விபத்தால் பட்டாசு கிடங்கிற்கு அருகில் தேவகி ஸ்கேன் ஸ்கேன் மையத்துக்குள் கரும்புகை பரவி 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 பேர் கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக, பட்டாசு கடையின் கட்டட உரிமையாளர் சுதந்திரராஜன், கடை உரிமையாளர்கள் செண்பகராஜன், ஆனந்த் மற்றும் வாகனத்திலிருந்து பட்டாசுகளை இறக்கிய 3 தொழிலாளர்கள் என மொத்தம் 6 பேர் மீது, சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இந்நிலையில் பட்டாசுக் கடையை குத்தகைக்கு எடுத்த செண்பகராமன் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடரும் உயிரிழப்புகள்
இந்தச் சம்பவம் தொடர்பாக, பட்டாசு கடையின் கட்டட உரிமையாளர் சுதந்திரராஜன், கடை உரிமையாளர்கள் செண்பகராஜன், ஆனந்த் மற்றும் வாகனத்திலிருந்து பட்டாசுகளை இறக்கிய 3 தொழிலாளர்கள் என மொத்தம் 6 பேர் மீது, சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இந்நிலையில் பட்டாசுக் கடையை குத்தகைக்கு எடுத்த செண்பகராமன் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கண்டு கொள்ளாத அதிகாரிகள்
வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறும் போது பதறுவதும் அதன் பின்னர் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் தொடர்கதையாகி வருகிறது. சிவகாசியில் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில், 'பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், பேரியம் நைட்ரேட் பயன் படுத்தி, பட்டாசு உற்பத்தி நடக்கிறது. இவை, பற்ற வைத்தால் மட்டுமே வெடிக்கும் என்பதால் பாதுகாப்பானது.

தீப்பற்றும் பட்டாசுகள்
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரிமம் பெறாமல், பட்டாசு உற்பத்தி நடக்கிறது. இவற்றின் தயாரிப்புக்கு தடை செய்யப்பட்ட, 'பொட்டாசியம் குளோரைடு' பயன்படுத்தப்படுகிறது. விலை குறைவாக கிடைக்கும் இந்த பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடியவை. இவை கையாளும் போதே வெடிக்கும். இது போன்ற வெடி தயாரிப்புகளே, தொடர் விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்கின்றனர் பட்டாசு உற்பத்தியாளர்கள்.

ஆய்வு அவசியம்
தொடர்ந்து பட்டாசு விபத்துகளால் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தீபாவளி காலத்தில் புற்றீசல் போல பல கடைகள் குடியிருப்பு பகுதிகளில் முளைத்துள்ளன. அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லை என்பதே பெரும்பாலோனோர் குற்றச்சாட்டு. ஓசி பட்டாசுக்காக கண்துடைப்பாக ஆய்வு நடத்தாமல் அதிகாரிகள் உரிய ஆய்வுகளை நடத்தி, தொடர் உயிர் இழப்புகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications