இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் மாற்றிக் கொடுத்த மருத்துவமனை- சென்னையில் பரபரப்பு!
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் மாற்றி ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை ராஜூவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த மனோஜ் காசநோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தனர். உயிரிழந்த மனோஜின் உடலை, தவறாக மணிகண்டனின் உறவினர்களிடம் மருத்துவமனை அதிகாரிகள் வழங்கினர். இதனை அறியாத மணிகண்டனின் உறவினர்கள், மனோஜின் உடலை புதைத்துவிட்டனர்.
அதனால், அதிர்ச்சியடைந்த மனோஜின் உறவினர்கள், மனோஜின் உடலை மீட்டுக்கொடுக்க குரோம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து மேடவாக்கம் அருகே புதைக்கப்பட்ட மனோஜின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, பின் மனோஜின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது சம்பவம் குறித்து சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் விமலாவிடம் விளக்கம் கேட்ட போது, உடலை மாற்றிக்கொடுத்தது பிணவறை ஊழியரின் தவறு தான் என்றும், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications