தூத்துக்குடியில் பெண்களிடம் நகை பறிப்பு- 2 பேரை மடக்கி பிடித்த பொதுமக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்து சென்ற பெண்களிடம் செயின் பறிக்க முயன்ற 2 பேரை பொது மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஓப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வந்தன. குறிப்பாக தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பைக்கில் வந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மணி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த ஒரு பெண் அவரது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக நடந்த வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டு முன்பு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகையை பறிக்க முயன்றார்.
சுதாரித்து கொண்ட அந்த பெண் கூச்சலிட்டவாறே போராடியுள்ளார். இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை மத்திய பாகம் போலீசில ஓப்படைத்தனர்.
அவரிடம் இன்ஸ்பெக்டர் ரேணியல் ஜேசுபாதம் விசாரணை நடத்தியதில் அவர் தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கமணி நகரை சேர்ந்த இசக்கிமுத்து என்பது தெரிய வந்தது.
இதே போல் அதே பகுதியை சேர்ந்த சந்தனசெல்வி என்பவரும் மாலை கடைக்கு சென்று விட்டு வீடு திரு்ம்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபர் அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார்.
சுதாரித்து கொண்ட சந்தனசெல்வி அந்த நபரின் சட்டையை கெட்டியாக பிடித்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மடக்கி பிடித்து வடபாகம் போலீசில் ஓபபடைத்தனர்.
செயின் பறிப்பில் ஈடுபட்ட முயன்றவர்களை பொதுமக்களை மடக்கி பிடித்த போலீசில் ஓப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அங்கு போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications