மேட்டுப்பாளையம் அருகே கார்கள் மோதி விபத்து: தாய்-மகள் பலி.. 5 பேர் படுகாயம்
இரு கார்கள் மோதிய விபத்தில் தாய்-மகள் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், தாய்-மகள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை வெள்ளமடையை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் இன்று தனது மனைவி சந்திரப்ரியா 36, மற்றும் இரண்டு வயது நிரம்பிய இரட்டை பெண் குழந்தைகளுடன் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு காரில் திரும்பி வந்துகொண்டிருந்தார்.

சத்தியமங்கலம் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்புறத்தில் ஆம்னி கார் ஒன்று எதிர்புறத்தில் வந்துகொண்டிருந்தது. அந்த காரில் பயணித்தவர்களும் வனபத்திரகாளியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்ததாக தெரிகிறது.
இதில் எதிர்பாராதவிதமாக இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் சந்திரப்பிரியா மற்றும் மகள் ஆஷித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications