எங்களை வெளியே விடுங்க..புதுவை ரிசார்ட்டில் தினகரன் கோஷ்டிக்கு எதிராக 2 பெண் எம்எல்ஏ-க்கள் ஸ்டிரைக்!
தங்களை விடுதியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள 2 பெண் எம்எல்ஏ-க்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
புதுவை: தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதியிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இரு பெண் எம்எல்ஏ-க்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக இணைப்புக்கு பின்னர், முதல்வருக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக 19 எம்எல்ஏ-க்கள் ஆளுநரை வெள்ளிக்கிழமை சந்தித்து தனித்தனியே கடிதங்களை கொடுத்தனர். இதன் பிறகு, அவர்கள் அனைவரும் கூவத்தூர் பாணியில் புதுவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இரு பெண்கள் எம்எல்ஏ-க்கள் தங்களை விடுதியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் , வீட்டுக்கு போக வேண்டும் என்றும் அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இன்று அவர்கள் விடுதியிலேயே உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியை ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன் செய்து வருகிறார். எனினும் அவர்கள் சமாதானம் ஆகவில்லையாம். இந்தநிலையில் இன்று புதுவையில் தங்கியுள்ள எம்எல்ஏ-க்களை தினகரன் இன்று சந்திக்கிறார்.
தினகரனுக்கு எதிராக போராட்டம் நடத்திய புதுவை ஓம்சக்தி சேகர், விடுதியில் தங்கியுள்ள 2 பெண் எம்எல்ஏக்கள் ஒருங்கிணைந்த அதிமுகவில் இணையவுள்ளனர் என்றும் அவர்களை கட்டாயப்படுத்தி தினகரன் தரப்பினர் அடைத்து வைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications