For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீடு புகுந்து துணிகரம்.. செல்போன் திருடிய இருவர் கைது

வீடு புகுந்து செல்போன் திருடிய இருவர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: வீட்டில் இருந்த செல்போனை திருடிய இரண்டு பேரை போலீசார் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நெய்னார் தெருவை சேர்ந்தவர் இப்ராகிம். டிப்ளமோ படித்துள்ள இவர் சம்பவத்தன்று இரவில் கம்ப்யூட்டர் பார்த்துவிட்டு வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கி விட்டதாக தெரிகிறது.

2 mobile thieves arrested in Tuticorin

வழக்கம் போல் அதிகாலையில் இப்ராகிம் எழுந்து பார்த்த போது வீட்டின் மேஜையில் வைத்திருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ந்தார். உடனே அவர் வீடு முழுவதும் தேடினார். செல்போன் கிடைக்கவில்லை. பின்னர், வாசல் அருகே வந்து பார்த்த போது, இருவர் அங்கு நின்று கொண்டிருந்தனர். சந்தேகப்பட்ட இப்ராகிம் உடனடியாக அவர்கள் அருகில் சென்ற போது, இவர்கள் இரண்டு பேரும் தப்பி ஓட முயன்றனர். விரைந்து சென்ற அவர் என்னுடைய வீட்டில் நுழைந்து செல்போனை எடுத்தீர்களா? என கேட்டிருக்கிறார்.

இதற்கிடையே இப்ராகிம் உறவினர்கள் சிலரும் அங்கு வந்துள்ளனர். பிடிபட்ட இருவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார்கள். இதனார் அவர்கள் இருவரையும் ஆறுமுகநேரி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, பிடிபட்ட நபர்கள் காயல்பட்டினம் சீதக்காதி நகரை சேர்ந்த முகம்மது அப்துல்காதர் சாகுல் ஹமீது, பரிமார் தெருவை சேர்ந்த சேகு நூர்தீன் என்பது தெரிய வந்தது. இவர்கள் இப்ராகிம் வீட்டில் செல்போனை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

English summary
Police officers arrested two people on theft charges related to stolen cell phones in Tuticorin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X