நானே நேரில் வருகிறேன்.. தூத்துக்குடி மதிமுக வேட்பாளரை உற்சாகப்படுத்திய அழகிரி
மதுரை: மு.க.அழகிரியை இன்று அவரது மதுரை வீட்டில் மதிமுக வேட்பாளர்கள் சதன் திருமலைக்குமார் மற்றும் ஜோயல் ஆகியோர் ஆதரவு கேட்டனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதலில் அழகிரி வீட்டுக்குப் போய் ஆதரவு கோரியிருந்தார். இதையடுத்து அவரது கட்சியின் தேனி வேட்பாளர் அழகுசுந்தரம் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கேட்டார்.
இந்த நிலையில், இன்று தென்காசி மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார், தூத்துக்குடி வேட்பாளர் ஜோயல் ஆகியோரும் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கோரினர்.

வேட்பாளர் ஜோயலுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள மு.க.அழகிரி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிட தானே தூத்துக்குடி வருவதாக ஜோயலிடம் உறுதி அளித்துள்ளார்.
அத்துடன் விரைவில் தூத்துக்குடி வந்து தேர்தல் பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்குவதாகவும் கூறியுள்ளார். இதனால் வரும் நாட்களில் மதிமுக வேட்பாளர் ஜோயலுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை தூத்துக்குடிக்கு நேரில் வந்து மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியினர் கடும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜோயல் பேசுகையில், ஆதரவு தருவதாக மு.க.அழகிரி உறுதியளித்துள்ளார். இது மகிழ்ச்சி தருகிறது என்றார்.
தூத்துக்குடியில் பெரியசாமி மகனை சந்திக்கிறார் ஜோயல். அதேபோல தென்காசியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக நிற்கிறார் சதன் திருமலைக்குமார் என்பது நினைவிருக்கலாம்.
ஏற்கனவே பாஜக வேட்பாளர் எச். ராஜாவும் அழகிரியைச் சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications