போலி சான்றிதழ் தயாரித்து ஆசிரியரான 2 பேர் அதிரடி கைது - சிக்கலில் மேலும் பலர்!
தர்மபுரி: தர்மபுரியில் போலி சான்றிதழ்களை தயாரித்து ஆசிரியர் பணியில் சேர்ந்த 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் உரிய படிப்பு படிக்காமல் போலி சான்றிதழ் தயாரித்ததும், பணியில் சேருவதற்காக சாதி சான்றிதழிலும் மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சேர்ந்த கிருபாகரன். இவர் தனது பெயரை செந்தில்குமார் என மாற்றி போலி சான்றிதழை தயாரித்துள்ளார். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்த முனிராஜ். இவர் தனது பெயரை துரைராஜ் என மாற்றி போலி சான்றிதழ் தயாரித்துள்ளார்.
இவர்கள் இருவரின் சான்றிதழ்களும் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டன. சான்றிதழ்கள் போலியானவை என தெரிந்ததும் போலீசார் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த ராஜேந்திரன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் மோசடி செய்த மேலும் பலர் சிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications