நெல்லையில் பட்டப்பகலில் கொடூரம்... ஓடும் பேருந்தில் அண்ணன், தம்பி வெட்டிப் படுகொலை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் அண்ணன், தம்பி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புடைமருதூரை சேர்ந்தவர்கள் மாரியப்பன், சுப்பிரமணி சகோதரர்கள். முன்னதாக திருப்புடைமருதூரில் சில மாதங்களுக்கு முன்பு கண்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். கண்ணன் கொலை வழக்கில் மாரியப்பன், சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கண்ணன் கொலை வழக்கு தொடர்பாக மாரியப்பன், சுப்பிரமணி ஆகிய இருவரும் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வீரவநல்லூரில் ஓடும் பேருந்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் கண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பழிக்கு பழியாக இந்த படுகொலை நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 15 கொலைகள் நடந்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications