ப்ளஸ் 2 தேர்வில் 'ஸ்டேட் ஃபர்ஸ்ட்' வந்த ஒரே பள்ளியை சேர்ந்த 2 பேர்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் ஒரே பள்ளியை சேர்ந்த 2 பேர் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
ப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10. 31 மணிக்கு வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவி ஆர்த்தியும், அதே பள்ளியை சேர்ந்த மாணவன் ஜஸ்வந்தும் 1,200க்கு 1,195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.

ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்தின் பாடம் வாரியான மதிப்பெண்கள் விபரம் வருமாறு,
தமிழ் - 199
ஆங்கிலம் - 197
கணிதம் - 200
இயற்பியல் - 199
வேதியியல் - 200
உயிரியல் - 200
பல பள்ளிகள் மாநிலத்தில் முதலிடத்தை பெற முயற்சி செய்து வந்த நிலையில் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த 2 பேர் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications