திருப்பூர் அருகே வேன் குப்புற கவிழ்ந்து விபத்து.. 2 பெண்கள் பரிதாப பலி.. 21 பேர் படுகாயம்!
வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் பலியானார்கள்.
Recommended Video

திருப்பூர்: தாராபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென்று குப்புற கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாராபுரம் அருகே உள்ள பகுதி காளிபாளையம். இங்கு தனியார் பனியன் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், பல்வேறு கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் வழக்கமாக வேனில்தான் காலையில் வேலைக்கு வருவது வழக்கம்.

அதுபோலவே, இன்றும் ஒரு வேனில், ஆண்கள், பெண்கள் என 23 பேர் அந்த கம்பெனிக்கு வேலைக்கு வந்துகொண்டிருந்தனர். மேட்டுப்பட்டி என்ற இடத்தில் வேன் வந்துகொண்டிருந்தபோது, சாலையில் இருந்த ஒரு கல் மீது வேன் ஏறியது. இதில் எதிர்பாராதவிதமாக வேனின் முன்பக்க டயர் டமார் என பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வேன் நடுரோட்டிலேயே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் இருந்தவர்கள் அனைவரும் ஒன்றாக இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டு அலறினர். இந்த இடிபாட்டில், பாப்பாத்தி என்ற 50 வயது பெண்ணும், பார்வதி என்ற 38 வயது பெண்ணும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்கள் இருவருமே வேறு வேறு கிராமத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
வேனில் பயணம் செய்த 21 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications