ஓடையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள்... விருதுநகர் அருகே பரபரப்பு
விருதுநகர்: விருதுநகர் அருகே ஓடையில் ஆதார் அட்டைகள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே உள்ள வி.முத்துலிங்காபுரம் கிராமத்தில் ஆதார் அட்டைக்கு விவரங்களை பதிவு செய்த பலருக்கு இன்னும் ஆதார் அட்டை வராத நிலையே உள்ளது. இதனால் அவர்கள் தினசரி விருதுநகர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வி.முத்து லிங்காபுரம் பெரிய கண்மாய்க்கான வரத்துக்கால் வாயில் இருந்து பிரியும் ஓடையில் சில ஆதார் அட்டைகள் கிடப்பதாக அந்த கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்கள் அங்கு சென்று பார்த்த போது ஆதார் அட்டைகள் தண்ணீரில் நனைந்து சிதைந்த நிலையில் கிடந்தன.
இது பற்றி கிராம மக்கள் விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து வி.முத்துலிங்காபுரம் சென்று தள ஆய்வு செய்து ஓடையில் ஆதார் அட்டைகள் இருந்தால் அவற்றை கைப்பற்றி வரும்படி தாசில்தார் பால் துரை வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் கிராம நிர்வாக அதிகாரி வெண்ணிலாவும், வருவாய் ஆய்வாளரும் அங்கு சென்று கிராம மக்கள் புகார் சொன்ன இடத்தை நேரில் பார்த்தனர். அப்போது அங்கு 20 ஆதார் அட்டைகள் தண்ணீரில் நனைந்து சிதைந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து வருவாய் அலுவலர்கள் அவற்றை கைப்பற்றி தாலுகா அலுவகத்தில் ஒப்படைத்தனர்.
ஆதார் அட்டை கிடைக்காமல் தாங்கள் தினசரி தாலுகா அலுவலகத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் நிலையில், கிராமத்தில் உள்ள சிலரது ஆதார் அட்டைகளை ஓடையில் வீசியது யார் என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராமத்தில் ஆதார் அட்டை கிடைக்காதவர்களுக்கு ஆதார் அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக இருக்கும் நிலையில் அதனை ஓடையில் வீசிச் சென்றது அங்குள்ள பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications