கன்னியாகுமரி: வீட்டின் மேல் மாடி பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை
கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலாம் அருகே நள்ளிரவு வீட்டின் மேல் மாடி பூட்டை உடைத்து 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

வீட்டின் மேல் மாடி பூட்டை உடைத்து நகை கொள்ளை
கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலாம் அருகே காரவிளை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ், 60 . இவர் தனது வீட்டில் அவர் ஒரு அறையிலும்.தனது மனைவி மற்றும் மகள் ஒரு அறையிலும் நேற்றிரவு தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டின் மேல் மாடி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள், சுந்தர்ராஜ் அறையை கதவை பூட்டி விட்டு மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து 20 சவரன் நகை மற்றும் ரொக்க பணம் ரூ 50 ஆயிரம் கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலையில் கண்விழித்து பார்த்த செல்வராஜ், வீட்டின் உடைக்கப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். இக்கொள்ளை சம்பவம் குறித்து உடனடியாக மார்த்தாண்டம் போலீசாருக்கு புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மோப்பநாய் ஓரா உதவியுடன் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications