சிவகங்கை அருகே பரபரப்பு.. அடகுக் கடையில் 200 பவுன் நகை கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் மெயின் ரோட்டில் உள்ள நகை அடகுகடையின் பூட்டுகளை உடைத்து 200பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏப்டுத்தியுள்ளது.

சிவகங்கை - திருப்பத்தூர் மெயின் ரோட்டில் மதகுபட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு மெயின் ரோட்டில் கருமந்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் கடந்த பல ஆண்டுகளாக நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த கிராமமக்கள் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெறுவது வழக்கம். சமீப காலமாக சிவகங்கை பகுதியில் பலத்தத மழை பெய்து வருவதால் ஏராளமான விவசாயிகள் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்று விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். இதனால் வழக்கத்தை விட தங்க நகைகளை சற்று கூடுதலாக இருந்துள்ளது.

200 sovereign jewels looted near Sivagangai

அடகு கடையில் செல்லப்பா என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு 9மணிக்கு வழக்கம் போல கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இன்று காலை கடையை திறக்க வந்த போது பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த மேலாளர் செல்லப்பா அதிர்ச்சியடைந்து மதகுபட்டி காவல்நிலையத்திற்கும் உரிமையாளர் சுப்ரமணியனுக்கும் தகவல் கொடுத்தார்.

கொள்ளை நடந்த இடத்தை இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்ஐ பாண்டியன் உள்ளிட்ட போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

200 sovereign jewels looted near Sivagangai

வெளிப்புற கேட்டில் உள்ள பூட்டுகளை உடைத்த கொள்ளையர்கள் உள்ளே லாக்கரில் வைத்திருந்த நகைகளை கொள்ளையடித்துள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் 45 லட்ச ரூபாய் இருக்கலாம் என தெரிகிறது. மோப்ப நாய் லைக்கா வரவழைக்கப்பட்டது. கடையில் இருந்து மதகுபட்டி கண்மாய் கரை வரை ஓடிய லைக்கா அதன்பின் நகரவில்லை.

கொள்ளை சம்பவம் குறித்து மதகுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடி பகுதியில்தான் அதிக அளவு கொள்ளை சம்பவம் நடைபெற்று வந்தது. சமீப காலமாக கொள்ளையர்கள் காரைக்குடியை தாண்டி சிவகங்கை பகுதிக்குள் நுழைந்துள்ளனர்.

கொள்ளை சம்பவம் குறித்து மேலாளர் செல்லப்பா கூறுகையில் வழக்கம் போல நேற்று கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டோம், இன்று காலை கடையை பார்க்கையில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போயிள்ளன என்றார்.

கொள்ளை சம்பவம் அறிந்த நகை அடமானம் வைத்தவர்கள் அடகு கடையின் முன் திரணட்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+