2015-ல் இலங்கையர் கூகுளில் அதிகம் தேடிய நடிகர் விஜய்
சென்னை: இந்த ஆண்டில் இலங்கை மக்கள் அதிகம் தேடிய நடிகர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் நடிகர் விஜய்.
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் கூகுளில் அதிகம் தேடியவர்கள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிடும். அதே போல இந்த வருடமும் கூகுள் நிறுவனம் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் உலகளவில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் நடிகை கிம் கர்தாஷியன் முதலிடம் பெற்று இருக்கிறார். உலகில் உள்ள அதிகமான நாடுகளில் கிம் கர்தாஷியனை அவரது ரசிகர்கள் போட்டி போட்டு தேடியுள்ளனர்.

கிம்முக்கு அடுத்த இடத்தில் கால்பந்து வீரர் மெஸ்ஸி இடம் பிடித்து இருக்கிறார். இந்தியாவில் இருந்து நடிகர் சல்மான்கான், நடிகை காத்ரீனா கைப் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் இடம்பிடித்து இருக்கின்றனர்.
இந்தியா, பூடான் மற்றும் ஃபிஜி போன்ற நாடுகளில் சல்மான்கானை ரசிகர்கள் அதிகம் தேடியிருக்கின்றனர். இதே போல வங்கதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடிகை கத்ரீனாவை அதிகம் தேடி இருக்கின்றனர்.
இந்த வரிசையில் நடிகர் விஜய்யும் இடம்பிடித்து இருக்கிறார். விஜய்யை இலங்கை மக்கள் அதிகம் தேடி இருப்பதாக கூகுள் நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.
இதன் மூலம் இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் விஜய்யின் புகழ் அதிகரித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் தற்போது இதனைக் கொண்டாடி வருகின்றனர்.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக?












Click it and Unblock the Notifications