டெல்லி பங்களாவில் இருந்து 204 பெட்டிகளில் ராமேஸ்வரம் வந்த கலாம் உடைமைகள்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: டெல்லி ராஜாஜி மார்க் பங்களாவில் இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடைமைகள் 204 பெட்டிகளில் ராமேஸ்வரம் வந்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தார். அவர் மரணம் அடைந்த பிறகு அந்த பங்களாவை அக்டோபர் 31ம் தேதிக்குள் காலி செய்யுமாறு மத்திய அரசு அவரின் உதவியாளர்களுக்கு உத்தரவிட்டது.

204 boxes of Dr Kalam’s belongings, mostly books, reach Rameswaram

கலாம் வசித்த பங்களாவை அவரது நினைவிடமாக மாற்றுமாறு எழுந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில் அந்த பங்களா மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பங்களாவில் இருந்த கலாமின் உடைமைகள் 204 பெட்டிகளில் அடைத்து ராமேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெரும்பாலான பெட்டிகளில் கலாம் பயன்படுத்திய புத்தகங்கள் இருந்தது. அந்த பெட்டிகள் 27ம் தேதி ராமேஸ்வரம் வந்தது.

பெட்டிகளை பெற்றுக் கொண்டதாக அவரின் உறவினர் ஷேக் சலீம் தெரிவித்துள்ளார். சலீம் அண்மையில் பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சலீம் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,

டெல்லியில் இருந்து 204 பெட்டிகள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான பெட்டிகளில் புத்தகங்கள் உள்ளன. அந்த புத்தகங்களை மக்கள் பார்வைக்கு வைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். கலாம் விட்டுச் சென்ற வேலையை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+