யார்ரா அவன் மொரட்டு ஆளா இருக்கான்! இதுகெல்லாமா ஆம்னி வேன் வச்சு வருவீங்க.. எப்புட்றா?

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: டீ குடிக்க வண்டியை நிறுத்திய கேப்பில், சரக்கு வாகனத்தில் தார்பாயை பிரித்து 2160 மதுபாட்டில்களை அபேஸ் செய்துள்ளது உசிலம்பட்டி கும்பல். இதையடுத்து உளுந்தூர் பேட்டை போலீசார் அவர்களை பிடிக்க விரைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டாஸ்மாக் குடோனில் இருந்து 770 மதுபான பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வேலூருக்கு கடந்த 20-ந்தேதி லாரி ஒன்று புறப்பட்டுள்ளது.

2160 liquor bottles were looted by the Usilampatti gang in Ulundurpet

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள சூரியகுப்பத்தை சேர்ந்த 45 வயதாகும் முத்துமணி இந்த லாரியை எடுத்துக் கொண்டு வேலூர் நோக்கி சென்றார். தஞ்சாவூர், உளுந்தூர் பேட்டை வழியாக வேலூர் நோக்கி சென்ற முத்துமணி, லாரியை உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூரில் நிறுத்தி விட்டு டீ குடித்தார். பின்னர் அங்கிருந்து லாரியை எடுத்துக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்றுள்ளார், காட்டுக்கோவில் அருகே சென்ற போது வயிறு பிரச்சினை ஏற்பட்டதால், லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

பின்னர் அவர் வந்து பார்த்த போது லாரியின் தார்ப்பாய் கிழிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர், டாஸ்மாக் அதிகாரிகளிடம் கூறிவிட்டு லாரியை வேலூர் குடோனுக்கு எடுத்து சென்றார்.

அங்கு மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டியை ஊழியர்கள் இறக்கி போது, அதில் 45 பெட்டிகள் மாயமானது தெரியவந்தது. அதிலிருந்த 2160 பாட்டில்கள் திருடு போயிருந்ததை கண்டு லாரி டிரைவர் அதிர்ச்சி அடைந்தார், உளுந்தூர்பேட்டை அருகே டீ குடிக்க நிறுத்திய இடத்தில் திருடு போயிருக்கலாம் என்று சந்தேகமடைந்த முத்துமணி, இது தொடர்பாக எலவனா சூர்கோட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

லாரி டிரைவர் முத்துமணியின் புகாரின் பேரில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் 7 பேர் கொண்ட கும்பல் தார்ப்பாயை பிரித்து அதிலிருந்த மதுபான பாட்டில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளை கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 26-ந்தேதி வழக்குப் பதிவு செய்த உளுந்தூர் பேட்டை பகுதி போலீசார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த விஜயன் (37), விக்கிரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் (35) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உசிலம்பட்டியை சேர்ந்த பொட்ராசு (45) என்பவர் தலைமையில் 7 பேர் மாருதி வேனில் பின் தொடர்ந்துள்ளார்கள்.

எறையூரில் நின்றிருந்த லாரியில் மதுபான பாட்டில்களை கொள்ளையடித்துவிட்டு, வேனில் ஏற்றிச் சென்று அனைவரும் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனையடுத்து மதுபாட்டில்களை திருடும் கும்பல் தலைவன் பொட்ராசு மற்றும் 4 பேரை பிடிக்க மதுரை சென்றுள்ளனர். மேலும், மதுபாட்டில்களை திருடப் பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+