25 பெண் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு - திருப்பூர் நூற்பாலையில் அதிகாரிகள் அதிரடி!
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த 25 பெண் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
காங்கேயம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பெண் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு, பதினெட்டு வயதுக்குட்பட்ட 25 பெண் குழந்தைகள் பணியாற்றுவதை கண்டறிந்து அதிகாரிகள் மீட்டனர். அவர்களில் இரு பெண் குழந்தைகள், நிறுவன ஊழியர்கள் தங்களை அடித்து துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் அந்நூற்பாலை உரிமையாளர், ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications