அதுக்குள்ள.. 21வது செஞ்சுரியின் கால் நூற்றாண்டை கடந்துட்டோம்! 25 வருஷத்தின் டாப் 5 மாற்றங்கள் என்ன?
சென்னை: 80ஸ் அல்லது, 90ஸ் கிட்ஸ் இந்த கட்டுரையை வாசித்தால் உங்களுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வரும். 21-ம் நூற்றாண்டு பிறக்கும்போது, அதாவது 2000-மாவது வருடம் நெருங்கியபோது, நம் மக்களிடையே இருந்த மிகப்பெரிய பயம் 'Y2K'. 2000-மாவது ஆண்டு பிறந்தால் கணினிகள் எல்லாம் செயலிழந்து உலகம் ஸ்தம்பித்துவிடும் என்பதுதான். கம்ப்யூட்டர் லாங்குவேஜ் 1999 வரைக்கும்தான் தகவமைக்கப்பட்டிருந்தது என்று வதந்திகள் கொடிகட்டி பரவின.
இன்னும் சிலர், ஒருபடி மேலே போய், 2000-மாவது ஆண்டில் உலகம் அழிந்துவிடும் என்று தீவிர பிரச்சாரம் செய்த காலகட்டம் அது. ஆனால், உலகமும் அறியவில்லை, கம்ப்யூட்டரும் உருகுலையவில்லை.. மாறாக, தகவல் தொழில்நுட்பத்தின் பொற்காலம் அப்போதுதான் தொடங்கியது.

ஆம்.. இந்த டிசம்பருடன், 21-ஆம் நூற்றாண்டின் கால் நூற்றாண்டை கடந்துவிட்டோம். இந்த 25 வருடங்களில் நாம் பார்த்த மிக முக்கிய தருணங்களை, வருங்காலத்தை திருப்பிப் போட்ட தருணங்களை, ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு வந்துவிடுவோமா..
டிஜிட்டல் புரட்சியின் தொடக்கம் (2000 - 2005)
இந்த ஐந்து ஆண்டுகளில் தான் நாம் கம்ப்யூட்டர்களில் இருந்து மொபைல் போன்களுக்கு மாறத் தொடங்கினோம். டேப் ரெக்கார்டரிலிருந்து, வாக்-மேனுக்கும் பிறகு, செல்போனுக்கும் பாடல் கேட்கும் அனுபவத்தை மாற்றினோம்..
நோக்கியா ராஜ்ஜியம்: 1100 மாடல் போன்கள் கையில் இருந்தாலே அது ஒரு கெத்து தான்.
இணையத்தின் வருகை: டயல்-அப் கனெக்ஷனில் "கீச்.. கீச்.." சத்தத்துடன் இணையத்தைப் பயன்படுத்திய காலம் அது. இன்டர்நெட் செட்டிங் அனுப்புங்க மேடம் என்று செல்போன் நிறுவனங்களின் கால் சென்டர்களுக்கு போன் செய்து வாங்கி இணையத்தில் ப்ரவுஸ் செய்வோம்.
என்னதான் 2ஜி மெல்ல மெல்ல உருட்டி தந்தாலும், வயிற்றுக்குள் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும் தனது குழந்தையை பார்த்த மகிழ்ச்சி, ரிசல்ட் வந்ததும் கிடைக்கும்பாருங்க. வார்த்தைகளால் சொல்ல முடியாத ஃபீலிங்ஸ் அது. இதன்பிறகு, கூகுள் மெல்ல மெல்ல நம் வாழ்க்கையின் அங்கமாக மாறியது.

சமூக வலைதளங்களின் எழுச்சி (2006 - 2010)
மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் விதத்தையே இந்த காலகட்டம் மாற்றியது.
ஆர்குட் டூ பேஸ்புக்: நண்பர்களைத் தேடிப் பிடிப்பதும், ஸ்டேட்டஸ் போடுவதும் ஒரு ஃபேஷனாக மாறியது.
ஐபோன் வருகை (2007): ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்திய ஐபோன், 'ஸ்மார்ட்போன்' என்ற புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்தது. நம் விரல் நுனிக்கு உலகம் சுருங்கியது. என்னதான், Nokia 9000 Communicator மற்றும் பிளாக்பெர்ரி ஆகியவை ஸ்மார்ட்போன் என்ற ஒன்றை அறிமுகம் செய்தாலும், அட்வான்சான ஓஎஸ், ஆப் ஸ்டோர் என பக்காவான பேக்கேஜ் தந்தது ஆப்பிள்தான். எனவே ஸ்மார்ட்போன் யுகம் 2007க்கு பிறகு ஆரம்பித்தது என்று சொல்லலாம்.
அதிவேக மாற்றங்கள் (2011 - 2015)
தொழில்நுட்பம் மட்டுமல்லாது, மக்களின் வாழ்க்கை முறையும் மாறத் தொடங்கியது.
4G புரட்சி: வீடியோக்களை பஃபரிங் இல்லாமல் பார்க்கத் தொடங்கினோம். யூடியூப் கிரியேட்டர்கள் பெருகினர்.
வாட்ஸ்அப் மாயம்: எஸ்எம்எஸ் (SMS) மெல்ல மறைந்து வாட்ஸ்அப் நம்முடைய பிரதான தகவல் தொடர்பு கருவியானது.
ஸ்ட்ரீமிங் மற்றும் நவீன வசதிகள் (2016 - 2019)
டிவி பெட்டிகளை விட ஓடிடி (OTT) தளங்கள் முக்கியத்துவம் பெற்றன.
ஜியோவின் வருகை: இந்தியாவில் டேட்டா கட்டணம் குறைந்ததும், சாமானிய மனிதனும் இன்டர்நெட்டை தாராளமாகப் பயன்படுத்தத் தொடங்கினான்.
ஆன்லைன் வர்த்தகம்: உணவு முதல் உடை வரை அனைத்தும் மொபைல் ஆப் மூலமே வீட்டிற்கு வரத் தொடங்கின.

சோதனையும் சாதனையும் (2020 - 2024)
இந்த கால் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால் கொரோனா (COVID-19). 2020-ல் உலகம் அப்படியே நின்றது. மீண்டும் "உலகம் அழிந்துவிடுமோ?" என்ற அச்சம் எழுந்தது.
மீண்டெழுதல்: தடுப்பூசிகள், தொழில்நுட்ப உதவி மற்றும் மனிதர்களின் மன உறுதியால் நாம் மீண்டோம். 'Work from Home' என்ற கலாச்சாரம் உருவானது.
AI யுகம்: தற்போது சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள், 2000-ல் நாம் பார்த்த சயின்ஸ் பிக்ஷன் படங்களை நிஜமாக்கிக் கொண்டிருக்கின்றன.
கடந்த 25 ஆண்டுகளில் நாம் பார்த்த மாற்றங்கள், இதற்கு முந்தைய 100 ஆண்டுகளில் நடந்த மாற்றங்களை விட அதிகம். 2000-ல் பயத்தோடு தொடங்கிய நாம், 2026-ஐ நோக்கி நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கிறோம். மாற்றங்கள் மாறலாம், ஆனால் மனிதகுலத்தின் முன்னேற்றம் என்றும் ஓயாது!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications