தயவு செய்து சினிமாவுக்கு ஜிஎஸ்டி வேண்டாம்.. மீண்டும் கெஞ்சும் கமல்
சென்னை: 28 சதவீத ஜிஎஸ்டி வரியால் பிராந்திய மொழிப்படங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
வருகிற ஜுலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவிருக்கிறது. சினிமாவுக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது. இதனால், சினிமா உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழ் திரைப்படத்துக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்குமாறு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியால் மாநில மொழிப்படங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்றும், வரியை குறைக்க முயற்சிக்குமாறு ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பிராந்திய மொழிப்படங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications