மானாமதுரை: எஸ்.ஐ மீது வெடிகண்டு வீசி கொல்ல முயற்சி- 3 பேர் கைது
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் எஸ்ஐ மீது நாட்டு வெடிகுண்டை வீச முயன்றவர்கள் கைது செயயப்பட்டனர்.
சிப்காட் காவல்நிலைய எஸ்ஐ தவமுனி, இவர் இன்று காலை போலீசார் செந்தில் மற்றும் ராஜா ஆகியோருடன் மானாமதுரை -சிவகங்கை சாலையில் வேலூர் விலக்கு என்ற இடத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது கருப்புகலர் அப்பாச்சி பைக்கில் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்களை மறிக்க முயன்ற போது போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீச முயன்றுள்ளனர்.
தகவலறிந்து மானாமதுரை இன்ஸ்பெக்டர் பால்பாண்டி உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று தைல மரக்காட்டிற்குள் பதுங்கி இருந்த மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, இரண்டு வீச்சரிவாள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் வேலூரைச் சேர்ந்த காளீஸ்வரன்(26), வினோத் கண்ணன்(23), செட்டிகுளத்தைச் சேர்ந்த ஆனந்த்பாபு(26) என தெரிய வந்தது. இதில் காளீஸ்வரன் மீது சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் சகோதரர்கள் இருவரை கொலை செய்த வழக்கும், மற்ற இருவர் மீதும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. சிப்காட் எஸ்ஐ தவமுனி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தியதால் க்யூ பிராஞ்ச் போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications