3 தொகுதிகளையும் கண்காணிக்க தேர்தல் பார்வையாளர் தமிழகம் வருகை… ராஜேஷ் லக்கானி தகவல்
19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள 3 தொகுதிகளையும் கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் இன்று மாலை தமிழகம் வர உள்ளனர்.
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த 3 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் மூவரும் இன்று மாலை தமிழகம் வர உள்ளனர்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுக்கள் கடந்த 26ம் தேதியில் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இன்றோடு வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

இதனையடுத்து, தேர்தல் வேலைகள் இந்த 3 தொகுதிகளிலும், வேகம் எடுத்துள்ளது. அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செய்யும் செலவுகளை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதிக்கு உத்தரகாண்ட் ஐ.ஏ.எஸ் அதிகாரி பூபால் சிங்கும், தஞ்சை தொகுதிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷேக் அகமதுவும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி யு.வி. ஜோஸ்சும் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் இன்று மாலை தமிழகத்திற்கு வர உள்ளனர் என்று தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த மே மாதம் 16ம் தேதி நடக்க வேண்டிய அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து ரத்து செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ சீனிவேலு மரணம் அடைந்ததால் அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது. இதனையடுத்து இந்த 3 தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications