கோவை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - விசைத்தறி அதிபர் குடும்பத்தோடு பலி
கோவை: கோவை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், விசைத்தறி அதிபர், மனைவி, மகனுடன் பரிதாபமாகப் பலியானார்.
கோவை மாவட்டம் இஞ்சிப்பட்டி கருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (70). விசைத்தறி குடோன் வைத்துள்ள பழனிச்சாமி, விவசாயமும் செய்து வந்தார். அவருடைய மனைவி இந்திராணி (60), மகன் செந்தில்குமார் (40).

இந்நிலையில், பழனிச்சாமி தனது மனைவி மற்றும் மகனுடன் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். காரை செந்தில்குமாரே ஓட்டிச் சென்றார்.
நேற்று காலை 7 மணியளவில் கார் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் மதுக்கரை முதலாவது சோதனைச் சாவடியை கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது மழை பெய்ததால், எதிரில் வந்த காரும், செந்தில்குமார் ஓட்டிச் சென்ற காரும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இதில் செந்தில் குமாரின் கார் தூக்கி வீசப்பட்டு சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில், கார் முற்றிலும் உருக்குலைந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி, இந்திராணி, செந்தில்குமார் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் எதிரே வந்த காரில் இருந்த கோவையை சேர்ந்த விக்னேஷ் (28), அனிஸ்குமார் (25), விஷ்ணுபிரசாத் (24), செல்வம் (25) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் பலியான பழனிச்சாமி, இந்திராணி, செந்தில்குமார் ஆகியோரின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications