ஆன்லைன் மூலம் ரூ.100 கோடி மோசடி: மூவர் கைது
சென்னை: தமிழகம் முழுவதும் ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் கைதான நிதி நிறுவன அதிபர், அவரது மகன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். பெண் மேலாளர் திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை குன்றத்தூரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (55). இவரது மனைவி சாயிப். மகன் சாமுவேல் (31). இவர்கள், இரட்டிப்பு வட்டி தருவதாக ஆன்லைனில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்து "அபாக்ஸ்' என்ற நிதி நிறுவனம் நடத்தினர்.
இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் செயல்பட்டது. இவர்கள் நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், படித்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். ஆனால், இவர்கள் கூறியபடி வட்டி வழங்கவில்லை. முதலீட்டு பணத்தையும் திருப்பி வழங்கவில்லை.
விருதுநகர் கிளையில் இவர்கள் நிறுவனத்தில் ரூ.64 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த சென்னை திருநீர்மலையைச் சேர்ந்த ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், விருதுநகர் மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. (பொ) கருணாகரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.
சுந்தர்ராஜ், அவரது மகன் சாமுவேல், அவர்களது மேலாளர் வசந்தகுமாரி (36) ஆகியோரை தனிப்படை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், சுந்தர்ராஜ், அவரது மனைவி, அவரது மகன் ஆகியோர் தமிழகம் முழுவதும் நூறு கோடி ரூபாய்க்கு மேலாக மோசடி செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு இன்னும் தாங்கள் ஏமாற்றப்பட்ட விவரம் தெரியவில்லை. பலர் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளதால் அவர்கள் புகார் தெரிவிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். கைது செய்த சுந்தர்ராஜ், அவரது மகன் சாமுவேல், மேலாளர் வசந்தகுமாரி ஆகியோரை தனிப்படை போலீஸார் திங்கள்கிழமை இரவு மதுரை டான்பீட் (முதலீட்டார்கள் பாதுகாப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சுந்தர்ராஜ், அவரது மகன் சாமுவேல் ஆகியோரை போலீஸார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலாளர் வசந்தகுமாரி திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மூவரையும், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும், தலைமறை வான சுந்தர்ராஜ் மனைவி சாயிப்பை தேடிவருகின்றனர்.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் விருதுநகர், திண்டுக்கல், மதுரை உள்பட அந்தந்த மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்யலாம்'' என்றார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications