ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற கார்... எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 பேர் பலி
நெல்லை: நெல்லை அருகே ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றது ஒரு கார். அப்போது எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் கார் மீது மோதியதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
நெல்லை மாவட்டம் மருதவனம் பகுதியை சேர்ந்தவர் கென்னடி ராஜவதனம். இவர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் பாதியாராக உள்ளார். இவர் பேரின்பபுரம் என்ற ஊரில் நடந்த குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு குடும்பத்தோடு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

காரில் 4 பெண்கள் இருந்தனர். வழியில் செங்குளம் என்ற இடத்தில் ஆளில்லா ரயில்வே கேட் ஓன்று உள்ளது. இந்த ரயில்வே கேட்டை கார் வேகமாக கடக்க முயன்ற போது, நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் மோதியது.

இதில் காரில் இருந்த குளோரி, ஸ்தோத்திர ராணி மற்றும் ஞானமேரி ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்தில் பலியானார்கள். கென்னடி ராஜவதனம் மற்றும் ஜெபமேரி ஆகியோர் படுகாயமடைந்து பாளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து ரயில்வே மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தைத் தொடர்ந்த நிறுத்தப்பட்ட ரயில், 6.45 மணிக்கு மேல் புறப்பட்டுச் சென்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications