மகளையே பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு 3 ஆயுள்: திருச்சி மகளிர் நீதிமன்றம் அதிரடி
பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
Recommended Video

திருச்சி: பெற்ற மகளையே பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தைக்கு திருச்சி மகளிர் நீதிமன்றம் 3 ஆயுள் தண்டனையை விதித்து அதிரடி தீர்ப்பு அறிவித்துள்ளது.
திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் கென்னடி 44. அவருக்கு 4 குழந்தைகள். ஆனால் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், 4 குழந்தைகளையும் கென்னடியே வளர்த்து வந்தார்.

இந்நிலையில், தன்னுடைய 11 வயது மகளை பெற்ற தந்தையே பலமுறை தொடர்ச்சியாக பலாத்காரம் செய்து வந்ததால், இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் கென்னடிமீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது.
அந்த வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பினை திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றம் இன்று அறிவித்தது. அதன்படி கென்னடிக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கியதுடன், அந்த 3 ஆயுளையும் தனித்தனியாக அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் கென்னடிக்கு விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக 3 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இதுதவிர. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications