கடன் தொல்லை: மன்னார்குடியில் விஷம் குடித்து 3 பேர் உயிரிழப்பு
கடன் தொல்லையால் மன்னார்குடியில் விஷம் குடித்து 3 பேர் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
மன்னார்குடி: கடன் தொல்லையால் மன்னார்குடியில் விஷம் குடித்த தாய், 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மன்னார்குடியைச் சேர்ந்த தமிழரசி, கணவர் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாததால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தமிழரசியையும் 2 குழந்தைகளையும் மீட்டு உறவினர்கள் தஞ்சை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடந்த சில நாட்களாக தஞ்சை அரசு மருத்துவமனையில் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை சிகிச்சை பலனின்றி தமிழரசி, மகன் ஷ்யாம் (11), மகள் மனிஷா (9) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த தமிழரசியின் கணவர் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications