மீண்டும் அமைச்சர்களான கோகுல இந்திரா, வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதவியேற்றனர்
சென்னை: தமிழக அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள கோகுல இந்திரா, வேலுமணி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்று மாலை அமைச்சர்களாக பதவியேற்றனர்.

லோக்சபா தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வென்றாலும் தேர்தல் பணியில் புகாருக்குள்ளானோர் மீது நடவடிக்கை பாய்ந்து வருகிறது. குறிப்பாக அதிமுக தோற்ற தொகுதிகள் கட்சி நிர்வாகிகளும் அத்தொகுதி அமைச்சர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதியில் பாரதிய ஜனதா வென்றது. இதனால் அங்கு கட்சி நிர்வாகிகளை மட்டுமின்றி அமைச்சர் கே.டி. பச்சைமாலையும் அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டார் ஜெயலலிதா.
அதேபோல் தருமபுரி, புதுச்சேரி தொகுதிகளில் பாமக, என்.ஆர். காங்கிரஸ் வென்றது. அங்கும் கட்சி நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் ஜெயலலிதா.
அத்துடன் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியதற்காக கட்சி நிர்வாகிகள் நீக்கப்பட்டதுடன் அமைச்சர் ரமணாவும் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். உடல்நலக் குறைவால் தேர்தல் பணியில் ஈடுபடாமல் இருந்த அமைச்சர் தொண்டாமுத்தூர் தாமோதரனும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
இவர்களுக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர்களான கோகுல இந்திரா, எஸ்.பி.வேலுமணி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேளாண் அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரகவளர்ச்சித் துறை அமைச்சராக எஸ்.பி. வேலுமணி, கைத்தறித்துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சராக கோகுல இந்திரா நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மூவருக்கும் இன்று மாலை ஆளுநர் ரோசையா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சரவை இலாகாக்கள் மாற்றம்
மேலும் நகராட்சி, ஊரக வளர்ச்சி அமைச்சரான கே.பி. முனுசாமிக்கு தற்போது தொழிலாளர் நலத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சராக இருந்த உதயகுமாருக்கு வருவாய்த்துறை, கைத்தறித்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சுந்தரராஜுக்கு விளையாட்டு இளைஞர் நலன் துறை என சிறிய அளவிலான இலாகா மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications