கோகுல்ராஜ் கொலை வழக்கு- தேடப்படும் குற்றவாளியான யுவராஜைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
சேலம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் தலித் இளைஞரான கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் தீரன் சின்னமலை பேரவை தலைவ யுவராஜை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். திருச்செங்கோட்டிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த இவர், கடந்த ஜூன் மாதம் பள்ளிப் பாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். காதல் விவகாரத்தால் அவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. விசாரணையில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட சிலருக்கு கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மீது கடத்தல், கொலை, வன்கொடுமை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதமாக யுவராஜ் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து யுவராஜ் உள்பட ஒன்பது பேர் மீது திருச்செங்கோடு நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாட்ஸப் மூலம், தனக்கும் தற்கொலை செய்துகொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவுக்கும் இடையே நடந்த போன் உரையாடல் ஆடியோவினை வெளியிட்டு அவர் தற்கொலையில் உள்ள சந்தேகங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
அவர் பேசியதாக வெளியான வாட்ஸப் ஆடியோவில், "இந்தக் கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியான பிறகு, வழக்கு திசை மாறியதால் நான் தலைமறைவாகிவிட்டேன்.பிறகு சில நாள்களில் கோவை நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டு இருந்தேன். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து இருந்தேன். ஆனால், அரூரில் 2 பேரை கைது செய்தவுடன், சரணடையும் முடிவை மாற்றிக் கொண்டேன்" என யுவராஜ் கூறியுள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜை பிடிக்க, சி.பி.சி.ஐ.டி போலீசார் 3 தனிப்படைகளை அமைத்துள்ளனர். ஈரோடு, திருச்செங்கோடு, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications