பழனி முருகன் கோவில் உள்ளே மது அருந்திய காவலர்கள் டிஸ்மிஸ்: வலம் வரும் வீடியோ
பழனி: பழனி முருகன் கோவிலின் உள்ளே பொதுமக்கள் தங்கி செல்லும் மண்டபத்தில் மது அருந்திய மூன்று இரவு நேர காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவில் தற்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. பழனி முருகன் கோவிலில் உள்ள ராஜகோபுரம் பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் தூக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பழனி மலையில் உள்ள பக்தர்கள் தங்கிச் செல்லும் மங்கம்மா மண்டபத்தில், 3 இரவு நேர காவலர்கள், மது அருந்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப்களில் வலம் வருகிறது.
பழனி மலை முருகன் கோவிலில் 200க்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் பணிபுரிந்து வருகின்றனர். பழனி மலைப்பாதையில் உள்ள மங்கம்மாள் மண்டபத்தில், இரவு நேரத்தில் காவலர்கள் மது அருந்திவிட்டு, அசைவம் சாப்பிடும் வீடியோ பக்தர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த காட்சிகள் சமூக வலைத்தலங்களில் தற்போது வெளியாகவே இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலை பாதுகாக்க வேண்டிய காவலர்களே, தவறான செயலில் ஈடுபட்டதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுபோன்று கோவில் புனிதத்திற்கு களங்கம் விளைவிப்பவர்களை, கடுமையாக தண்டித்தால் மட்டுமே ஆகம விதிகள் காக்கப்படும் என்று இந்து அமைப்பினர் தெரிவித்தனர். இந்நிலையில் மது அருந்திய காவலர்கள் மூன்று பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கோவில் நிர்வாகம், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications