தாம்பரம் அருகே லாரி மீது வேன் மோதி 3 பெண்கள் பலி - ஐவர் படுகாயம்
தாம்பரம் அருகே அனகாபுத்தூர் மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலியாகினர்.ஐவர் படுகாயமடைந்தனர்.
சென்னை: தாம்பரம் அருகே அனகாபுத்தூர் மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது டாடா ஏஸ் வேன் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலியாகினர். ஐந்து பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த பெண்களின் பெயர் சுஜாதா,45, வசந்தி,40, தமிழ்,38 என்பதாகும். இவர் ரத்தினமங்கலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று அதிகாலையில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பூ விற்பனைக்காக லோடு வேனில் 12 பேர் சென்று கொண்டிருந்தனர். தாம்பரம் - மதுரவாயில் பைபாஸ் சாலையில் அனகாபுத்தூர் மேம்பாலம் அருகே சென்ற போது அந்த சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மோதியது.
மோதிய வேகத்தில் வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ரத்தினமங்கலத்தைச் சேர்ந்த பெண்கள் விபத்தில் சிக்கினர்.
சம்பவ இடத்திலலேயே இரண்டு பெண்களும், மருத்துவமனையில் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரி, அமுல் உட்பட 3 பேர் தலையில் காயமடைந்ததால் சென்னை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த சாலையில் மின் விளக்குகள் கிடையாததால், தெரியாமல் சென்று வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு பணியில் உடனடியாக போலீசார் வரவில்லை, அதனாலேயே உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியாததே உயிரிழப்புக்கு காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications