டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலி... பெற்றோர்கள் மருத்துவமனை முற்றுகை
சென்னை: சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த துப்புரவு பணியாளரின் மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததற்கு தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலாங்கரையைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் சம்பத். அவரது 3 வயது மகள் ப்ரதீபா. காய்ச்சல் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுமிக்கு டெங்குகாய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்போது, அவர்களுடைய மருத்துவமனையிலேயே அனைத்து வசதிகளும் இருப்பதால், அரசு மருத்துவமனைக்கு செல்லத் தேவையில்லை என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு சிறுமி ப்ரதீபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் எனக்கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார் சிறுமியின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications