Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளத்தால் சுத்தமான பெருங்குடி-கொடுங்கையூர் குப்பை கிடங்குகள்-மீண்டும் குவியும் 1 லட்சம் டன் குப்பை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நகரிலும், புறநகர் பகுதிகளிலும் ஒரு லட்சம் டன் குப்பைகள் குவிந்துள்ளன. இந்த குப்பைகள் எல்லாம் பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக்கிடங்குகளில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் என்று தெரியவந்துள்ளது. சாலைகள், தெருக்களில் தேங்கிய கழிவுகளை அகற்றும் பணிகளில் தன்னார்வலர்கள், துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மக்கும் குப்பைகளை விட, பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் இருப்பதால், அவற்றை அகற்றுவதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகளில் திறந்து விடப்பட்டதால் கரையோரங்களில் இருந்த லட்சக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சில பகுதிகளில் முதல் தளத்தையும் மூழ்கடித்து 2வது தளத்தையும் வெள்ளம் தொட்டு மிரட்டியது. இந்த வெள்ளம் வடிந்த போதுதான் வீடுகளுக்குள் சேறும், சகதியும் புகுந்திருப்பது தெரிந்தது.

வீடுகள் முழுவதும் சேறு, சகதிகள் நிரம்பியுள்ளன. அந்த நீருடன் கழிவுநீர் கலந்திருந்ததால் வீடுகள் கழிவறைகள் போல பரிதாபமாக காட்சியளித்தன. வீடுகளுக்குள் படிந்து விட்ட அந்த அசுத்தமான சகதியை அகற்ற மக்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். இதற்காக பல ஆயிரம் செலவு செய்ய வேண்டியுள்ளது. வெள்ளம் வடிந்து 4 நாட்கள் ஆகி விட்டதால் அந்த சகதி கழிவுகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த துர்நாற்றத்தை சமாளித்துக் கொண்டு மக்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மெல்ல திரும்பும் இயல்பு நிலை

மெல்ல திரும்பும் இயல்பு நிலை

மழை வெள்ளம் சென்னை மக்கள் அனைவரையும் ஒரு தாய் மக்கள் என்று சொல்லும்படி ஒன்று சேர வைத்து விட்டது. தற்போது சென்னையில் மக்களிடையே இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது. 5554 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த சுமார் 17 லட்சம் பேரில் பலரும் தங்கள் வீடுகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

வெள்ளம் வடியாத பகுதிகள்

வெள்ளம் வடியாத பகுதிகள்

90 சதவீத பகுதிகளில் வெள்ளம் அகற்று விட்ட நிலையில் மீதமுள்ள பகுதிகளிலும் தண்ணீரை அகற்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் மழை நீர் முழுமையாக அகற்றப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள்.
ஆனால் தாம்பரம், முடிச்சூர் புறநகர் பகுதிகள், வேளச்சேரி, வியாசர்பாடி, வளசரவாக்கம், முகலிவாக்கம் ஆகிய பகுதிகளில் இன்னமும் மழை நீர் வடியவில்லை. சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின்சார வாரியம் ஆகிய மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.

சகதிகளாக மாறிய தெருக்கள்

சகதிகளாக மாறிய தெருக்கள்

வெள்ளம் வடிந்த பகுதிகளில் மக்கள் சேதமடைந்த தங்கள் வீடுகளை சீர்படுத்தத் தொடங்கியுள்ளனர். வீடுகளுக்குள் மழைத் தண்ணீரால் பயன்படுத்த முடியாதபடி மாறிவிட்ட பொருட்களை மக்கள் தெருவோரங்களில் போட்டு வருகிறார்கள். ஏற்கனவே மழை வெள்ளம், காட்டாறு தண்ணீர் போல கரைபுரண்டு ஓடியதால் மற்ற பகுதிகளில் கிடந்த குப்பைகளையெல்லாம் அடித்து வந்து தெருக்களில் குவித்து விட்டது. இதனால் வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் குப்பைகளாகவும், சேறும், சகதிகளுமாக காட்சியளிக்கிறது.

1 லட்சம் டன் குப்பைகள்

1 லட்சம் டன் குப்பைகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுமார் 33 ஆயிரம் தெருக்களில் குப்பைகள் தேங்கியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுப்படி சுமார் 1 லட்சம் டன் குப்பைகள் தெருக்களில் கிடக்கின்றன. இந்த குப்பைகள் எல்லாம் பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக்கிடங்குகளில் இருந்து அடித்துவரப்பட்ட குப்பைகள் என்பது தெரியவந்துள்ளது.

ஒரு வாரத்திற்குள் தூய்மை பணி

ஒரு வாரத்திற்குள் தூய்மை பணி

சென்னையில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள் அந்த பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், வெளி மாவட்டத்தில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை 300 லாரிகள், 60 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்துக்குள் சென்னையில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தூய்மைப்பணி விறுவிறுப்பு

தூய்மைப்பணி விறுவிறுப்பு

சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும், ஒவ்வொரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இதற்கான பணிகள் நடைபெறுகின்றன. நகரில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சைதாப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியிலுள்ள தெருக்களை சுத்தம் செய்து வருகின்றனர். எனினும் குப்பைகள் அகற்றும் பணி பெரும் சவாலாகவே உள்ளது.

துர்நாற்றம் வீசும் பகுதிகள்

துர்நாற்றம் வீசும் பகுதிகள்

அமைந்தகரை, பிபி கார்டன், வேளச்சேரி ராம்நகர், சதாசிவம் நகர், பெருங்குடி கல்லுக்குட்டை, திருவொற்றியூர் கார்கில் நகர், வெற்றி நகர், அன்னை சத்தியா நகர், வியாசர்பாடி, மணலி, எண்ணூர், முகப்பேர், வில்லிவாக்கம், சூளைமேடு, கோட்டூர்புரம், மடிப்பாக்கம், பெரும்பாக்கம், மணப்பாக்கம், கோவிலம் பாக்கம், முகலிவாக்கம், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நிலை நிலவுகிறது. இன்னும் ஓரிரு தினங்களுக்குள் இந்த பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்றியே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில் குப்பைகள் தேங்கிய தெருக்களில் நோய் பரவும் அபாயம் ஏற்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கொசுக்கள் உற்பத்தி

கொசுக்கள் உற்பத்தி

குவிந்துள்ள குப்பைகளால் துர்நாற்றம் ஒருபக்கம் இருக்க, கொசுக்கள் உற்பத்தியை அதிகரிக்க செய்துள்ளது. எனவே குப்பைகள் அதிகம் தேங்கி கிடக்கும் தெருக்களில் மருத்துவ முகாம்களை அதிகமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது வெள்ளம் பாதித்த பகுதிகளில் தோல் நோய் மற்றும் காய்ச்சல் அதிகரித்தப்படி உள்ளது. இதை தடுக்க மருத்துவ குழுக்கள் மழை பாதிப்பு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

குப்பைக்கிடங்கு மலைகள்

குப்பைக்கிடங்கு மலைகள்

சென்னையில் வழக்கமாக தினமும் சுமார் 5 ஆயிரம் டன் குப்பை அகற்றப்படுவது வழக்கம். தற்போது பல மடங்கு அதிகமாக குப்பைகள் அகற்றப்படுகின்றன. இந்த குப்பைகளும் மீண்டும் பெருங்குடி, கொடுங்கையூரில் கொட்டப்படுகிறது.
குப்பைகள், சகதி கழிவுகள் குவிப்பு காரணமாக பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கொட்டும் இடங்களில் மலை போல குப்பைகள் குவிந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+