நாமக்கல் அருகே 3000 கடத்தல் மணல் மூட்டைகள் பறிமுதல்: கனிமவளத்துறை அதிரடி
கடத்தப்படவிருந்த 3000-க்கும் அதிகமான மணல்மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Recommended Video

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கடத்தப்படவிருந்த மணல் 3000-க்கும் அதிகமான மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பரமத்திவேலூரை அடுத்துள்ள பொன்மலர்பாளையம், கொந்தலம், எஸ்.கே.மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மணலை மூட்டைகளில் கட்டிக் கொண்டு இரு சக்கர வாகனங்கள் மூலம் கடத்தப்பட்டு வருவதாக நாமக்கல் கனிமவளத்துறைக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

மூட்டை, மூட்டைகளாக மணல்
இந்த புகார்களையடுத்து, மாவட்ட கனிமவளத்துறை AD.ஜெயந்தி மற்றும் வருவாய் ஆய்வாளர் தமிச்செல்வி ஆகியோர் தனித்தனியாக அந்த பகுதிகளில் நேற்றிரவு அந்த பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 3000-க்கும் அதிகமான மணல் மூட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றினை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் கடும் எச்சரிக்கை
மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை கண்டதும், மணல் மூட்டைகளை கீழே போட்டுவிட்டு இருசக்கர வாகனங்களில் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமவளத்துறை கூடுதல் இயக்குனர் ஜெயந்தி எச்சரித்துள்ளார்.

தொடரும் மணல் திருட்டு
இரு சக்கர வாகனம் என்றில்லை, மாட்டு வண்டிகளில்கூட மணல் கடத்தல் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்க 'தலை'கள் உதவியுடன் இந்த மணல் கடத்தல் நடத்தப்பட்டு, அவைகள் மூட்டைக்கு இவ்வளவு விலை என்று நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்வது வாடிக்கையாகிவிட்டது. பல அடி ஆழத்துக்கு பொக்லன் இயந்திரத்தை வைத்து மணல் அள்ளப்படுவதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதாக பொதுமக்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வாடிக்கையான மணல் கடத்தல்
பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரியாற்றிலிருந்து மணல் கடத்தல் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து ஒன்இந்தியாவிலும் பலமுறை செய்திகள் எதிரொலித்தன. கடந்த வாரம் கூட பரமத்தி வேலூர் அடுத்த ஆனங்கூர் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக கூறி பொதுமக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். அத்துடன் அங்கு மணல் அள்ளிய மர்மநபர்களையும், டிராக்டரையும் பிடித்து பலமுறை போலீசாரிடம் பொதுமக்களே ஒப்படைத்திருக்கின்றனர். தொடர்ந்து மணல் கடத்தல் நிலை ஏற்பட்டால் சாலைமறியல் செய்வதை தவிர வேறு வழியில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். எனினும் இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மற்றும் காவல்துறை உள்ளிட்டவைகள் மணல் கொள்ளையை தடுக்க பல்வேறு வகைகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications