பாட்னா குண்டு வெடிப்பு: குமரியில் 31 பஸ்கள் உடைப்பு 8 பேர் கைது

பீகார் மாநிலம் பாட்னா வில் நேற்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசிய பொதுக் கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 6 பேர் பலியாயினர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குண்டுவெடிப்பு குறித்து தகவல்கள் வெளியான அடுத்த சில நிமிடங்களில் குமரி மாவட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. அரசு பஸ்கள் கல் வீசி தாக்கப்பட்டன.
நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு அருகே வரிசையாக 3 பஸ்கள் கல் வீசி தாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ற அரசு விரைவு பஸ் ஒன்று கல் வீசி தாக்கப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 31 அரசு பஸ்கள் கல் வீசி உடைக்கப்பட்டன.
சுமார் 1 மணி நேரத்திற்குள் நடந்து முடிந்த கல்வீச்சு சம்பவத்தில் 5 அரசு பேருந்து டிரைவர்கள் காயமடைந்தனர். அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பஸ் டிரைவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கற்கள் வீசப்பட்டதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது போலீசார் தலையிட்டு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி பேருந்துகளை இயக்கச் செய்தனர்.
மாவட்டம் முழுவதும் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், நாகர்கோவிலில் இருந்து நெல்லை மற்றும் திருவனந்தபுரம் சென்ற பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இரவு நேரத்தில் கிராமப் புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இரவு 8 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்படாததால் கிராமப் புறமக்கள் பெரும் அவதிப்பட்டனர். அவர்கள் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தநிலை இன்று காலை வரை நீடித்தது. காலை 7 மணிக்கு மேல்தான் கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
திடீர் வன்முறை குறித்து தகவல் அறிந்ததும் நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரண் குமரி மாவட்டம் வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்த அவர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் தீவிர விசாரணை நடத்தி பஸ் உடைப்பு தொடர்பாக 9 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பஸ் உடைப்பில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதன்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications