டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்: ஜெ. வலியுறுத்தல்
சென்னை: டீசல் விலையுவர்வால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரும். எனவே, டீசல் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

டீசல் விலையுயர்வு...
பணவீக்கம், அதிலும் குறிப்பாக உணவு பணவீக்கம் இன்னமும் எதிர்பார்த்த அளவு கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலையில், உணவு பணவீக்கம் உயர்வதற்கு காரணமான டீசல் விலையை நேற்று நள்ளிரவு முதல் எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தி இருப்பது கவலை அளிக்கிறது.

டீசல் விலை நிர்ணய கொள்கை...
முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் டீசல் விலை நிர்ணயக் கொள்கையே எண்ணெய் நிறுவனங்கள் இது போன்று விலை உயர்வை அறிவித்திருப்பதற்கு காரணம் ஆகும். சர்வதேச அளவில் டீசல் விலை குறைந்து கொண்டே வருகின்ற நிலையில், முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் டீசல் விலை நிர்ணயக் கொள்கையை சுட்டிக் காட்டி, அதன்படி டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் என்று எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இருப்பது ஏழை மக்களை வருத்தமடையச் செய்துள்ளது.

கூடுதல் சுமை...
டீசல் விலை உயர்வு காரணமாக, உணவுப் பொருட்களை ஆங்காங்கே எடுத்துச் செல்லும் வேன், லாரி ஆகியவற்றின் கட்டணங்கள் உயரும். இந்த உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலையையும், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையையும் உயர்த்த வழிவகுக்கும். இது மட்டுமல்லாமல், பிற வாகனங்களின் கட்டணங்களும் உயரக்கூடும். இதன் மூலம் தனியார் வாகனங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் மிகவும் பாதிக்கப்படுவர். சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த டீசல் விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

சங்கிலித் தொடர்...
டீசல் விலை உயர்வு என்பது சங்கிலித் தொடர் போன்றது. அனைத்து பொருட்களின் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக விளங்குவது டீசல் விலை உயர்வு. இந்த உயர்வைக் கட்டுப்படுத்தினால், உணவு பணவீக்கம் உள்பட அனைத்து பணவீக்கமும் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

வாபஸ் பெற வேண்டும்...
தற்போது எண்ணெய் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ள டீசல் விலை என்பது முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கையை அடிப்படையாக கொண்டது. பல துறைகளில் மாற்றங்களை கொண்டு வரும் பாரத பிரதமர், நான் பல முறை சுட்டிக்காட்டியுள்ளபடி, பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கையில் தனி கவனம் செலுத்தி, பணவீக்கம் மற்றும் விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும், தற்போதைய டீசல் விலை உயர்வை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications