புதுச்சேரியில் பயங்கரம்... 33 வயதுப் பெண் நடு ரோட்டில் சரமாரியாக வெட்டிக் கொலை
புதுச்சேரி: புதுவையில் மேலும் ஒரு பரபரப்புக் கொலை நடந்துள்ளது. டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சத்யப்பிரியா என்ற 33 வயதுப் பெண் நடு ரோட்டில்வைத்து சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகிறார்கள். ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகளும், மக்களும் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்தப் பெண் படுகொலை ரங்கசாமி அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் நடுத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தனியார் கல்வி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் சத்யப்பிரியா (33). இவர் புதுச்சேரி 100 அடி ரோட்டில் உள்ள தனியார் டைல்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இவருக்கும் அமலன் என்கிற லூர்துநாதன் (28) என்பவருக்கும் இடையே கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சத்யப்பிரியா நேற்று மாலை 6.30 மணியளவில் வேலையை முடிந்து வீட்டிற்கு தனது ஸ்கூட்டியில் புறப்பட்டார்.
சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் பதுங்கி இருந்த லூர்துநாதன் திடீரென்று அரிவாளுடன் பாய்ந்து வந்து சத்யப்பிரியாவை வழி மறித்தார். பின்னர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவரது தலை மற்றும் கழுத்தில் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சத்யப்பிரியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சத்யப்பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சத்யப்பிரியா பரிதாபமாக இறந்தார்.
லூர்துநாதன் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்தார். ஆனால் அந்த பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து லூர்துநாதனைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications